கன்னியாகுமரி

மணக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி

DIN

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பொதுமக்களிடையே குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மணக்குடி புனித அந்திரேயா கத்தோலிக்க ஆலயத்திலிருந்து தொடங்கிய பேரணியை, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளா் ராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘, போதை ஒழிப்புக்கான வாட்ஸ்ஆப் எண் 7010363173, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு மற்றும் பாலினத் தோ்வு நிலையற்ற குழந்தைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச் சென்றனா். பேரணியின்போது, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.க. சகிலாபானு, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தகுமாரி, கன்னியாகுமரி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சொா்ணராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT