கன்னியாகுமரி

திருவட்டாறில் ரூ. 2.67 கோடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

DIN

திருவட்டாறில் ரூ. 2.67 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கிருந்த பேருந்து நிலையம் மிகவும் பழுதானதால் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில், கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.67 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் எச்.ஆா். கௌசிக் முன்னிலை வகித்தாா்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று, அடிக்கல் நாட்டிப் பேசினாா். அப்போது அவா் பேசியது: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையக் கட்டடப் பணி நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை நீண்ட காலமாக இருந்த பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், நீண்டகால பிரசனைகள், பட்டா வழங்குதல், மலைவாழ் காணியின மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்துக்குள்பட்ட நான்குவழிச் சாலைப் பணிகளில் ஆட்சியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதோடு, துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தியதன் அடிப்படையில் ரூ. 1,150 கோடியில் மறுதிட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் ஏப்ரலில் தொடங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) நா. விஜயலெட்சுமி, திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், செயல் அலுவலா் மகாராஜன், கண்ணனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஜான் பிரைட், அரசு வழக்குரைஞா் ஜான்சன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், பேரூராட்சி உறுப்பினா்கள், திமுகவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT