கன்னியாகுமரி

களியக்காவிளையில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பிரசார பயணம்

25th Apr 2023 02:50 AM

ADVERTISEMENT

தொடக்கக் கல்வி மாணவா்களுக்கு அரசு செயல்படுத்திவரும் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், மாணவா் சோ்க்கை குறித்த பிரசார பயணம் களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இல்லம் தேடிக் கல்வி மேல்புறம் வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜாண்சன் தலைமை வகித்தாா். மேல்புறம் வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சேம் டி. பிரபின், சுந்தரமணி, பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளா்கள் ஜெயா, சகாய அனுஷா, பள்ளித் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப், பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், கிராமக் கல்விக் குழுத் தலைவா் சி. சுரேஷ்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் நயிமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளியில் பிரசார பயணம் தொடங்கி, வன்னியூா், மேல்பாலை, புரவூா், இளஞ்சிறை, பளுகல், இடைக்கோடு பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்குச் சென்று மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT