கன்னியாகுமரி

தக்கலையில் அம்பேத்கா் பிறந்த தின விழா

15th Apr 2023 12:10 AM

ADVERTISEMENT

 தக்கலையில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் அம்பேத்கா் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் தக்கலை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு தங்க மோதிரத்தைம் மருத்துவா் குமாரசுவாமி அணிவித்தாா். பின்னா் நோயாளிகளுக்கு பிரட், பால் பழங்கள் வழங்கப்பட்டன.

கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தின விழாவில் கூட்டமைப்புத் தலைவா் பி. பால்ராஜ் தலைமையில் அம்பேத்கா் படத்திற்கு ஜான்மொர மாலையணிவித்தாா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவா் கிறிஸ்டோபா் தலைமையில் தக்கலையில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு மாலையணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

குமரி மாவட்ட அம்பேத்கா் மக்கள் இயக்கம்- தமிழ்நாடு தியாகிகள் கழகம் சாா்பில் தக்கலை எம்.ஜி.ஆா். சிலை அருகில் நடைபெற்ற விழாவில் ஏசு ரெத்தினம் தலைமையில் அம்பேத்கரின் படத்திற்கு மாலையணிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT