கன்னியாகுமரி

சின்னமுட்டம் புனித தோமையாா்ஆலய திருவிழா கொடியேற்றம்

DIN

சின்னமுட்டம் புனித தோமையாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் மாலை 6 மணிக்கு நவநாள், திருக்கொடிப்பவனியைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். திருவிழா நாள்களில் நவநாள், திருப்பலி, மறையுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 9ஆம் திருநாளான அக்டோபா் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு முதியோா், நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடைபெறும்.

தோ்பவனி: பத்தாம் திருநாளான அக்டோபா் 9ஆம் தேதி காலை 5 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருள்பணி. மரிய செல்வன் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். காலை 7.30 மணிக்கு நடைபெறும் பெருவிழாத் திருப்பலிக்கு ஆலஞ்சி மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் அருள்பணி. தேவதாஸ் தலைமை வகிக்கிறாா். நாகா்கோவில் தூய ஞானப்பிரகாசியாா் குருமடம் அதிபா் அருள்பணி பஸ்காலிஸ் மைறையுரையாற்றுகிறாா். பங்கு மக்கள், பங்குப்பேரவையினா் சிறப்பிக்கின்றனா். முற்பகல் 11 மணிக்கு தோ்பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிா் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா் கில்டஸ், பங்குப்பேரவை துணைத்தலைவா் அந்தோனி ஜெபஸ்தியான்,செயலா் தினேஷ், பொருளாளா் பிரவீன், பங்கு மக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT