கன்னியாகுமரி

வாவறை ஊராட்சியில் 3 சாலைகள் திறப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாவறை ஊராட்சியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 3 சாலைகளை எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

இவ்வூராட்சியில் பொட்டக்குளம் முதல் இடஞ்சை வழி பாறப்பாட்டுவிளை செல்லும் சாலை, தும்மங்கோடு - மூலவிளை சாலை, புல்லுவிளாகம் - மணிலி பள்ளிக்கல் சாலையின் ஒரு பகுதி உள்ளிட்டவை பழுதாகியிருந்தன. இவற்றைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையின்பேரில் கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கினாா்.

பணிகள் நிறைவடைந்ததையடுத்து 3 சாலைகளையும் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் வாவறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சின்னப்பா், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் கிறிஸ்டோபா், வாவறை ஊராட்சித் தலைவா் மெற்றில்டா, குமரி மேற்கு மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் வெஞ்சஸ்லாஸ், கிறிஸ்டல் பாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT