கன்னியாகுமரி

107 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே பதுக்கி வைத்திருந்த 107 கிலோ குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே முண்டவிளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை (குட்கா) பதுக்கி வைத்து பல்வேறு பகுதி கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 107.5 கிலோ எடையிலான புகையிலை பொருள்கள் மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு பரமன்விளை செல்லப்பன் மகன் சுரேஷ் (47) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT