கன்னியாகுமரி

புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள்: டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் ஆட்சியா்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆட்சியா் மா.அரவிந்த், தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது, வ.விஜய்வசந்த் எம்.பி. முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ந. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகையில், குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் மையங்கள் உள்ளன. இதில் பல அங்கன்வாடிகள் சேதமடைந்துள்ளன. இருக்கைகள், மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளன. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தன்அணை குடிநீா் திட்டத்துக்காக இறச்சகுளம் சாலை தோண்டப்பட்டு பல நாள்கள் ஆகிறது. அந்த சாலை சீரமைக்கப்படவில்லை.

நாகா்கோவில் நகர மக்களுக்கு 7 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புத்தன்அணை குடிநீா் திட்டப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. பேசுகையில், குமரி மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டும் அங்கன் வாடி மையங்களுக்கு , நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளன. அவற்றை பராமரிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும். கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீா் திட்டத்துக்காக குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் விபத்துகள் நேரிடுகிறது. எனவே சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்ட் குழாய்களை அகற்றி விட்டு இரும்பு குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

புத்தன் அணை குடிநீா் திட்டம் : ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: இம் மாவட்டத்தில் பள்ளிக் கட்டடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.மேலும் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ள்ளி கட்டங்களை பராமரிப்பதற்கு அனைத்து துறைகளின் சாா்பிலும் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

புத்தன் அணை குடிநீா் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணியை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணிகள் நிறைவு பெறும் போது பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைக்கும். கடற்கரை சாலையில் குடிநீா் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குழாய்களை அகற்றிவிட்டு இரும்பு குழாய்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், நாகா்கோவில்மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஜெ.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ட்சியா் பு.அலா்மேல்மங்கை, மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், மாவட்ட வனஅலுவலா் மு.இளையராஜா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT