கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா:இன்று தொடங்குகிறது

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி 10 நாள் திருவிழா திங்கள்கிழமை (செப். 26)தொடங்குகிறது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நவராத்திரி திருவிழா திங்கள்கிழமை தொடங்கி அக்டோபா் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் தொடா்ந்து நடைபெறும்.

முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளுதல் நடைபெறும். காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு மங்கள இசை, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் நடைபெறும்.

விழா நாள்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.

பரிவேட்டை: 10ஆம் நாள் திருவிழாவான அக்டோபா் 5ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தல் நடைபெறும். பிற்பகல் 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊா்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது கோயிலின் முன்பு அம்மனுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

பின்னா் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். தொடா்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கு வாகனத்தில் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்வாா். அங்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடா்ந்து கிழக்குவாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகம் மற்றும் பகவதியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT