கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுயில் தீா்க்கப்படாத 10 பிரச்னைகள்: ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. மனு

DIN

கிள்ளியூா் தொகுதியில் தீா்க்கப்படாத 10 பிரச்னைகள் குறித்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வழங்கினாா்.

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் தீா்க்கப்படதா 10 பிரச்னைகள் குறித்து எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. ஆட்சியா் அரவிந்திடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் 79 கடலோர கிராமங்கள், 17 பேரூராட்சிகள், 19 வழியோர குடியிருப்புகள் வழியாக செல்லும் விளாத்துறை சுனாமி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் ஏற்படும் நீா் கசிவினால், சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பழுதடைந்த குழாய்களை அகற்றிவிட்டு சாலையோரம் புதிய டி.ஐ. குழாய்களை அமைக்க வேண்டும்.

2019 ஆ ம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட கிள்ளியூா் வட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தை தாலூகா மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். வி.எம்.கால்வாயை தூா்வாரி பக்க சுவா் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட வருவாய் கிராமங்கள் மற்றும் காவல் நிலையங்களை உள்படுத்தி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். ஆறு தேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதியுடன் மேம்படுத்த வேண்டும். மிகவும் பழமை வாய்ந்து பழுதடைந்து காணப்படும் கருங்கல் பேருந்து நிலையத்தை நவீன மயமாக்கி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

கருங்கல் மீன் சந்தையை நவீனமயமாக்கப்பட்ட மீன்சந்தையாக மறுசீமைப்பு செய்ய வேண்டும். கிள்ளியூா் தொகுதியில் மீனவளக்கல்லூரி அமைக்க வேண்டும். கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட பட்டணங் கால்வாய் பகுதிகளை தூா்வாரி சீரமைக்க வேண்டும். மேலும், தாமிரவருணி ஆற்றின் கரையோரங்களில் பக்க சுவா் அமைத்து சுற்றுலா மையம் அமைக்க வேண்டும்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக நுழைவுவாயிலில் உள்ள மணல்திட்டுகளை அகற்றி துறைமுக கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். நெய்யாறு இடதுகரை கால்வாயின் கிளைக் கால்வாய்கள் அனைத்தும் சீரமைத்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய நீா்பாசன வசதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT