கன்னியாகுமரி

போதை ஒழிப்பு விழிப்புணா்வு:இரு மாநில எஸ்.பி.க்கள் பிரசாரம்

DIN

தமிழக, கேரள மாநில காவல் கண்காணிப்பாளா்கள் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளையில் நடத்தப்பட்டது.

இருமாநில எல்லையோர பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் இப்பிரசாரத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத், திருவனந்தபுரம் ஊரக காவல் கண்காணிப்பாளா் ஷில்பா தியாமையா, போலீஸாா் இணைந்து ஆட்டோ ஓட்டுநா்கள், வாடகை காா் ஓட்டுநா்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். புகாரளித்த தனித்தனி வாட்ஸ் ஆப் எண்ணை விளக்கி கூறினா்.

தொடா்ந்து, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பிலுள்ள கூரியா் அலுவலகத்திலும், மருந்துக் கடையிலும் இருமாநில காவல்துறை அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்தனா். இதில், தக்கலை டிஎஸ்பி கணேஷ், களியக்காவிளை காவல் ஆய்வாளா் காளியப்பன், உதவி ஆய்வாளா் சிந்தாமணி, நெய்யாற்றின்கரை டிஎஸ்பி ஸ்ரீகாந்த், காவல் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT