கன்னியாகுமரி

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆண்டு விழா இன்று தொடக்கம்

26th May 2022 02:45 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை (மே 26) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதில், வியாழக்கிழமை நடைபெறும் விளையாட்டு விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜே.ஆா்.வி. எட்வா்ட் தலைமை வகிக்கிறாா். தாளாளா் மற்றும் செயலாளா் பைஜூநிசித்பால் உரையாற்றுகிறாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை(மே 27) மாணவா் பேரவை ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில், அனுக்கீா்த்திவாஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ம.கா.பா.ஆனந்த் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். மேஜிக் நிபுணா் சாம்ராஜின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை(மே 28) காலை 9.30 மணிக்கு கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில் கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநா் எம்.ஜி.ராஜமாணிக்கம், செஷல்ஸ் நாட்டின் கெளரவ தூதா் சேஹா எம்.சாய் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT