கன்னியாகுமரி

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா: 27இல் கொடியேற்றம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழா 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு வைகாசித் திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்புப் பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறாா்.

பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோா் செய்கின்றனா்.

நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம் நடைபெறும். இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதலும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், 5ஆம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்திலும், 6ஆம் நாள் கற்பக வாகனத்திலும், 7ஆம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

கலிவேட்டை: 8ஆம் நாள் திருவிழாவான 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடா்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக் கோலக் காட்சியும், அன்னதானமும் நடைபெறும்.

9ஆம் நாள் திருவிழாவில் அய்யா அனுமன் வாகனத்திலும், 10ஆம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

தேரோட்டம்: 11ஆம் நாள் திருவிழாவான 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதியுலா நடைபெறும்.

விழா நாள்களில் காலை மாலை அய்யாவுக்குப் பணிவிடையும் நண்பகல் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும், அன்னதா்மமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT