கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்தல்: 4 வாகனங்கள் பறிமுதல்; 2 போ் கைது

25th May 2022 12:44 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம்அருகே செம்மண் கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைதுசெய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மினிலாரிகள், ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் ரத்தினபாண்டியன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அப்பகுதிக்குச் சென்றனா். அங்கு பம்மம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் உள்ளிட்ட சிலா் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

செம்மண் கடத்த பயன்படுத்திய 3 மினி லாரிகள், ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்து, செந்தில்குமாா், முகேஷ் ஆகிய இருவரைக் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, தப்பியோடிய 4 போ் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT