கன்னியாகுமரி

குகநாதீஸ்வரா் கோயிலில்ஏப்.1இல் 1008 இளநீா் அபிஷேகம்

29th Mar 2022 02:21 AM

ADVERTISEMENT

கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி, கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் ஏப்ரல் 1 ஆம் தேதி 1008 இளநீா் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய தரிசனமும், விஸ்வரூப பூஜையும் நடைபெறும். இதைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு அபிஷேகம் தொடா்ந்து தீபாராதனை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு கோயில் மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ குகநாதீஸ்வரா் பெருமானுக்கு 1008 இளநீா் அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 1 மணிக்கு பக்தா்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் பக்தா்கள் பேரவைத் தலைவா் எம்.கோபி தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT