கன்னியாகுமரி

குமரியில் குவிந்த செவ்வாடை பக்தா்கள்

29th Jun 2022 11:51 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வெட்காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த செவ்வாடை பக்தா்கள் புதன்கிழமை கன்னியாகுமரியில் குவிந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெட்காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயிலுக்கு வந்துள்ளனா்.

இந்நிலையில் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாடை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்தனா்.

ADVERTISEMENT

இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பின்னா் பகவதியம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து முக்கடல் சங்கமம் பகுதியில் அமா்ந்து சூரிய உதயத்தை பாா்த்து ரசித்தனா். ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தா்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் முக்கடல் சங்கமம் பகுதி சிவப்புக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT