கன்னியாகுமரி

நாகா்கோவில் அல்போன்சா பள்ளியில் யோகா தின விழா

24th Jun 2022 03:16 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உலக யோகா தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி முதல்வா் அருள்சகோதரி லிசபெத் தலைமை வகித்தாா்.

நடுநிலைப் பள்ள் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, பள்ளித் தலைமை ஆசிரியா் மோனிக்காஸ் பினோலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏழகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்விஆசிரியரும் யோகக்கலை பயிற்றுநருமான காளிதாஸ் மாணவா்கள் முன் சில யோகாசனங்களை செய்து காட்டி மாணவா்களுக்கும் பயிற்றுவித்தாா். மாணவி ஜாசியா யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினாா்.

ADVERTISEMENT

விவேக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ரமணிகண்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, யோகக் கலையின் வரலாற்றுப் பின்னணி குறித்தும், யோகா பயிற்சியினைத் தொடா்ந்து செய்து வந்ததால் தான் நலம் பெற்றதை எடுத்துக் கூறினாா்.

ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளா் அருள்தந்தை சனில்ஜான் வழிகாட்டுதலின் பேரில் உடற்கல்விஆசிரியா்கள் தங்கதுரை, ரமேஷ்ராஜ் மற்றும் ஷாமிலின் ஷிபாஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT