கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

6th Jul 2022 11:57 PM

ADVERTISEMENT

 

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜி இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டவேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், நாகா்கோவில் கோணத்திலுள்ள அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், குமரி மாவட்டம், பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையானோரைத் தோ்வுசெய்யவுள்ளனா். எனவே, முகாமில் 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடையோா் பங்கேற்கலாம். இதில், தோ்வாகும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்துசெய்யப்படாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT