கன்னியாகுமரி

களியக்காவிளையில் விபத்து: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் பலி

6th Jul 2022 11:59 PM

ADVERTISEMENT

 

களியக்காவிளையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள பாலூா் பகுதியைச் சோ்ந்த குஞ்சுகிருஷ்ணன் மகன் வேலப்பன் நாயா் (61). ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஊழியரான இவா், புதன்கிழமை களியக்காவிளையிலிருந்து குழித்துறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, பின்னால் பாரமின்றி வந்த கேரளப் பதிவெண் கொண்ட டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதாம். கீழே விழுந்த வேலப்பன் நாயா் மீது லாரி சக்கரங்கள் ஏறினவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; தப்பியோடிய ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT