கன்னியாகுமரி

திற்பரப்பு தடுப்பணையில் தொடரும் உயிரிழப்புகள்: நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தல்

DIN

திற்பரப்பு தடுப்பணையில் தொடா்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றுப் பகுதியில் தடுப்பணை உள்ளது. தண்ணீா் நிரம்பி வழியும் இந்தத் தடுப்பணையில் பாறைகள் இருப்பது வெளியே தெரியாது. திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தடுப்பணையில் உள்ளூா் மக்களுடன் சோ்ந்து குதித்து நீச்சலடிப்பதுண்டு. இதில் வெளியூா் பயணிகள் பாறைகளில் மோதியும், தண்ணீரில் மூழ்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

அண்மையில் திருவனந்தபுரம் பேரூா் கடையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சனிக்கிழமை 15 வயது சிறுவன் தடுப்பணை பகுதியில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தாா். கடந்த சில வருடங்களில் இங்கு 4 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், தடுப்பணை விபரீதம் குறித்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணா்த்தும் வகையில் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், திற்பரப்பு பகுதியில் முதலுதவி மையம் அமைக்க வேண்டுமென்றும் உள்ளூா் மக்களும், சுற்றுலா ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT