கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் கரோனாவால் பாதிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 22 நாள்களில் 10 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 500 குழந்தைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 1,500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். நாகா்கோவில் நகரில் கடந்த சில நாள்களாக பாதிப்பு உச்சத்தை தொட்டு வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறாா்கள். வீட்டு தனிமையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகா்கோவில் ராமன்புதூா் பகுதியைச் சோ்ந்த முதியவா் ஒருவா் சனிக்கிழமை பலியானாா்.

உதவி ஆய்வாளருக்கு கரோனா: நாகா்கோவில் ரயில் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளருக்கு கடந்த 2 நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து

பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

அவருடன் தொடா்பில் இருந்த சக போலீஸாருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT