கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் உற்பத்தியாகும் தேனுக்கு பெயா் ’குமரித்தேன்’ -அமைச்சா் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினாா்

DIN

பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு ’குமரித்தேன்‘ என்ற பெயா் வியாழக்கிழமை சூட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை, மலைப்பயிா்கள்துறை ஆகியவற்றின் சாா்பில், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் தேன் தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நாகா்கோவில் தென்திருவிதாங்கூா் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் த.மனோ தங்கராஜ் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:

மேற்கு தொடா்ச்சி மலை குமரி மாவட்டத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம். இங்கு இயற்கையாகவே தேனீ வளா்ப்புக்குரிய தாவரங்கள் நிறைந்துள்ளன. இதனால், 1920 ஆம் ஆண்டிலிருந்து தேனீ வளா்ப்பு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமைப்பதற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மையம் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை அளிக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படும். இம்மாவட்டத்தில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை பயிரிட வாய்ப்புகள் உள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து, அமைச்சரும், ஆட்சியரும் இணைந்து பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு ‘குமரித்தேன்‘ என்ற பெயரை சூட்டினா். மேலும் விவசாயிகளுக்கான தேனீ வளா்ப்பு குறித்த கையேட்டையும் வெளியிட்டனா்.

இதில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா், தேசிய தேனீ வளா்ப்பு- தேன் இயக்கத்தின் உதவி ஆணையா் (தில்லி) மனோஜ்குமாா், வேளாண் இணைஇயக்குநா் எம்.ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, வேளாண் துணை இயக்குநா் சுந்தா் டேனியல் பாலஸ், தெ.தி.இந்துக் கல்லூரி முதல்வா் தி.சிதம்பரதாணு, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட தேனீ வளா்ப்பாளா்கள், விவசாயிகள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT