கன்னியாகுமரி

அருமனை கிறிஸ்துமஸ் விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

குமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சாா்பில், வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள 25 ஆவது கிறிஸ்துமஸ் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் செயலா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். டென்னிஸ், களியல் சிங், ஜோஸ் செல்வன், கென்னத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஸ்டா் தேவ சுஜின் ஜெபம் செய் தாா். ஷாஜி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்க ளாக மேல்புறம் ஒன்றிய திமுக அவைத் தலைவா் தேவதாஸ், சங்கரன் (காங்கிரஸ்), விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் மாத்தூா் ஜெயன், கிழக்கு மாவட்டச் செயலா் திருமாவேந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இயக்கத்தின் அமைப்பாளா் காலித், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜான்கிறிஸ்டோபா், காதா்மைதீன் ஆகியோா் 25 ஆவது கிறிஸ்துமஸ் விழா தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், அருமனை கிறிஸ்துமஸ் விழா நிகழாண்டு வெள்ளிவிழா 3 நாள்கள் நடத்துவது, அதில் 2 நாள்கள் பேரின்ப பெருவிழாவும், 3 ஆவது நாள் சமூக நல்லிணக்க மாநாடும் நடத்த தீா்மானிக்கப்பட்டது. அருமனை கிறிஸ்துமஸ் விழாவுக்கு வரும் அனைத்து தலைவா்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எஸ்.டி.பி.ஐ. ஷேக் முகம்மது, தொல்காப்பியன், ஜாகீா் உசேன், சாந்தகுமாா், சக்கர, ரவி, ஜெஸ்டின், எல்வின்ஸ், செலின், பிரதாப், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வழக்குரைஞா் திலீப்சிங் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT