கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் மீண்டும் திறப்பு

DIN

குமரி மாவட்டத்தில் கன மழை தொடரும் நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை அணையிலிருந்து மறுகால் வழியே விநாடிக்கு 1000 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாலையில் தொடங்கிய மழை திங்கள்கிழமை காலை வரை விடாமல் பெய்தது.

இதில், அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 65 மி.மீ., சிவலோகம்- 50 மி.மீ., சுருளகோடு- 49 மி.மீ., பெருஞ்சாணி- 44.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு திங்கள்கிழமை காலையில் விநாடிக்கு 1468 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அணையின் புதிய மறுகால் மதகுகள் வழியாக மாலை 4 மணிக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மாலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 45.73 அடியாக இருந்தது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, குழித்துறை தாமிரவருணியாறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT