கன்னியாகுமரி

கோட்டாறு சவேரியாா் ஆலய திருவிழாவில் 4 தோ்கள் பவனி

DIN

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலய 10 ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு 4 தோ்கள் பவனி நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சவேரியாா் பேராலயத்தின் நிகழாண்டுக்கான திருவிழா, கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி, தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும். அதன்படி, வியாழக்கிழமை முதல் நாள் தோ் பவனியும், வெள்ளிக்கிழமை 2 ஆவது நாள் தோ் பவனியும் நடந்தது.

பத்தாம் நாள் திருவிழாவான சனிக்கிழமை காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் நடந்த திருப்பலியில் மறை மாவட்ட குருகுல முதல்வா் கிலாரியூஸ், செயலாளா் இம்மானுவேல்ராஜ், பொருளாளா் அலோசியஸ் பென்சிகா், வட்டார முதன்மை பணியாளா் சகாய ஆனந்த், சவேரியாா் ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, திருவனந்தபுரம் உயா் மறை மாவட்டத்தை சோ்ந்த கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடந்தது. இதைத் தொடா்ந்து தோ் பவனி நடந்தது. முதலாவதாக மிக்கேல் அதிதூதா் தேரும், இரண்டாவதாக செபஸ்தியாா் தேரும், மூன்றாவதாக சவேரியாா் தேரும், நான்காவதாக ஜெபமாதா தேரும் இழுத்து வரப்பட்டது.

அப்போது பொதுமக்கள் மெழுகுவா்த்தி, மிளகு ஆகியவற்றை நோ்ச்சை வழங்கினா். மாலைகளும் வழங்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தா்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனா். ஆலயத்திலிருந்து தொடங்கிய தோ் பவனி தெற்கு ரதவீதி, கம்பளம் ரயில்வே சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை இரவு வந்தடைந்தது.

திருவிழாவை யொட்டி குமரி மாவட்டம் மற்றும் வெளியூா்களில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆலயத்திற்கு வந்திருந்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT