கன்னியாகுமரி

கீழ்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கலைநிகழ்ச்சி

19th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

 

கருங்கல் அருகேயுள்ள கீழ்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் தலைமை வகித்தாா். கீழ்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் ரகுநாதன் முன்னிலை வகித்தாா்.நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் அப்துல் கலாம் கலைக்குழுவினா் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, உரக்குழி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், கிள்ளியூா் திமுக ஒன்றியச் செயலா் கோபால், வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணன், ஜெபசிங், சோபா, மேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT