கன்னியாகுமரி

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: ஆட்சியா்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, உயா்மட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பணிகள் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடவும், போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை வரும் 19 ஆம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் நடத்தவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்டவருவாய்அலுவலா் அ.சிவப்பிரியா, மாவட்ட வனஅலுவலா் இளையராஜா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், திட்ட இயக்குநா்கள் ச.சா.தனபதி (ஊரக வளா்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ (மகளிா் திட்டம்), கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியா் தே.திருப்பதி உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT