கன்னியாகுமரி

திருவள்ளுவா் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, முக்கிய சுற்றுலாத் தலங்கள், விமான, ரயில் நிலையங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இங்குள்ள திருவள்ளுவா் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் தலைமையில் போலீஸாா் அதிநவீன ரோந்துப் படகுகளில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்குச் சொந்தமான 11 சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT