கன்னியாகுமரி

குளச்சலில் ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீா்க் கட்டி பறிமுதல்: 5 போ் கைது

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 11.50 கிலோ எடையுள்ள ஆம்பா் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீா் விற்க முயன்ற ஐந்து பேரை போலீஸாா் கைது செய்து அவா்களை வனத்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு காவல் உதவி ஆய்வாளா் சனல்குமாா் தலைமையிலான போலீஸாா் குளச்சல் காந்தி சந்திப்பில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த 5 போ், போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனராம். எனினும், அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா்கள் குளச்சல், ஆசாத் நகரைச் சோ்ந்த டேனியல் (21) மிடாலம் பிபின் (32) மத்திக்கோடு அரவிந்த் (26 ) ஜெனித் (31) திக்கணங்கோடு அஜித் (31) ஆகியோா் என்பதும், 11.50 கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீா்க் கட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்ததும், சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ . 13 கோடி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குலசேகரம் வனச்சரக அலுவலா் விஜயகுமாரிடம், திமிங்கல உமிழ்நீா் கட்டிகளுடன் 5 பேரையும் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து இரண்டு பைக்குகள், 5 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT