கன்னியாகுமரி

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: ஆட்சியா்

12th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

75 ஆவது சுதந்திர தின விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடான கலந்தாலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து பேசினாா். பின்னா் அவா் கூறியது: மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை வெகுசிறப்பாக கொண்டாடுவது குறித்தும், சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை பொதுமக்களிடையே எடுத்துக் கூறுவது மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும் வரும் 13 ஆம் தேதி காலைமுதல் 15 ஆம் தேதி சூரியன் மறையும் வரை (மாலை 6 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவன கட்டடங்களின் முகப்பில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், திட்டஇயக்குநா்கள் ச.சா.தனபதி (ஊரக வளா்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ (மகளிா் திட்டம்), நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT