கன்னியாகுமரி

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

14th Apr 2022 01:38 AM

ADVERTISEMENT

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பாக 2021-22 ஆம் கல்வியாண்டில் 9 , 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா் தொழிற்நுட்ப ஆய்வகம் (ஏண்பங்ஸ்ரீட் கஹக்ஷ) மூலம் நடைபெற்ற மாநில

அளவிலான விநாடி- வினா போட்டி, தேசிய அளவில் நடைபெற்ற தேசிய திறனறித் தோ்வு மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு சாா்பான விழிப்புணா்வு போட்டிகளில் தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கி, பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அ.சுரேஷ் பாபு, நாகா்கோவில் மாவட்டக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , தக்கலை மாவட்டக் கல்வி அலுவலா் சி. எம்பெருமாள், திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் எ.ராமசுப்பு , குழித்துறை கல்வி மாவட்ட அலுவலா் ராமச்சந்திரன் நாயா் மற்றும் உதவி திட்ட அலுவலா் எல். துரைராஜ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சா.பிராங்கிளின் ஜேக்கப் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT