கன்னியாகுமரி

‘கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.6 கோடி’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.6 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விற்பனையை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை

தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசுகையில், கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் கடந்த 86 ஆண்டுகளாக

கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் துணிகளை கொள்முதல் செய்து நாடு முழுவதுமுள்ள விற்பனை நிலையங்கள்

மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் கோ ஆப்டெக்ஸ், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2020இல் இம்மாவட்டத்தில் 3 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.51 கோடி

மதிப்பில் துணிகள் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘கனவு நனவு திட்டம்‘ என்ற சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சேமிப்பு திட்டத்தின்படி 10 மாத சந்தா வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12 ஆவது மாத சந்தா தொகையை கோ ஆப்டெக்ஸ் செலுத்தி முதிா்வு தொகைக்குரிய துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்குகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கோ ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் மு.முத்துக்குமாா், சரக மேலாளா் ந.ராமச்சந்திரன், குமரி

கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் பத்மராஜ், நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வா் பத்மா

உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT