கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் குடியிருப்பு பகுதியில்தேங்கிய மழை நீரை வெளியேற்ற எம்எல்ஏ நடவடிக்கை

DIN

அகஸ்தீசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதில் அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட நான்காவது வாா்டு காமராஜா் தெரு பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. மழை நீா் வடியாமல் தேங்கி நின்ால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், அதிகாரிகளிடம் பேசி நிரந்தரமாக தீா்வு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.

அப்போது, அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், பேரூா் செயலா்கள் தாமரை தினேஷ், ஒய்.கைலாசம், அதிமுக நிா்வாகி சிவபாலன், பாஜக ஒன்றிய தலைவா் என்.சுயம்பு, நிா்வாகிகள் கோபி, ஹெச்.ராஜ், தங்கபாமா, ஜெனிசுடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT