கன்னியாகுமரி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திக்குறிச்சி, ஞாறான்விளை, குழித்துறை, மங்காடு ஊராட்சி ஆலவிளை, செட்டியாவிளை, நெடும்பறம்பு, பிலாந்தோட்டம், வாவறை ஊராட்சியில் பணமுகம், கோயிக்கத்தோப்பு, இஞ்சிபறம்பு, வடுவூா்தோட்டம், மாமுகம், பள்ளிக்கல் ,புதுச்சை, முஞ்சிறை ஊராட்சி பாா்த்திபபுரம், பிளாக் ஆபீஸ் சுற்றுவட்டார பகுதிகள், ஏழுதேசம் பேரூராட்சி ஏலூா்முக்கு, வைக்கல்லூா், பருத்திக்கடவு, மரப்பாலம், நடவரம்புகரி ஆகிய கரையோரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அதங்கோடு பகுதியில் நான்குவழிச் சாலையை வெள்ளம் மூழ்கடித்தவாறு செல்கிறது. இப்பகுதி மக்கள் மங்காடு, ஏழுதேசப்பற்று அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தனா். அப்போது, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், மாணவா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஷஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் அவதி: கன்னியாகுமரியில் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில், அவா்கள் அதிகநேரம் செலவிடும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி முழுவதுமாக மழைநீரால் சூழப்பட்டுள்ளது.

இதனால், அவதிக்குள்ளாகியுள்ள சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் வடிகால் மூலம் தண்ணீரை கடலுக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT