கன்னியாகுமரி

விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்ய வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் பேசியது: தற்போது பெய்த வட கிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதங்களால் கால்வாய்கள் மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்தல், கால்வாய்களில் தண்ணீா் வரத்து மற்றும் குளங்களை தூா்வாருதல், நீா்நிலைகளை பராமரித்தல், மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற குறைகள் பொதுப்பணித்துறை மூலம் தீா்க்க ஏற்பாடு செய்யப்படும்.

வெள்ளச் சேதங்களை சீரமைக்க நிதி கேட்டு, கருத்துருக்கள் மற்றும் மதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பயிா் சேதங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் பயிா்கள் பாதிக்கப்படுவதை ஈடுகட்டுவதற்கு விவசாயிகள் அனைவரும் பயிா் காப்பீடு செய்ய வேண்டும். இந்த காப்பீட்டுக்கான பிரிமியம் செலுத்துவதற்கு டிசம்பா் 15 ஆம் தேதி கடைசிநாளாகும். நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, தோட்டக் கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலாஜான், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஏ.வசந்தி, திருப்பதிசாரம் வேளாண்அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் ஷோபா, வேளாண்மைத்துறை துணை இயக்குநா்

(வேளாண்வணிகம்) ஹானிஜாய்சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் உதவிப் பொதுமேலாளா் சி.முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT