கன்னியாகுமரி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு

5th Nov 2021 11:03 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி சேவாபாரதி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேவாபாரதி அன்பு இல்லத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் வளையாபதி ஸ்ரீ சுயம்பு வழங்கினாா். தொடா்ந்து குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ் மற்றும் நிா்வாகிகள் சுபாகரவேல், கிருஷ்ணராஜ், நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT