கன்னியாகுமரி

கூத்தலிங்கேஸ்வரா் கோயிலில் இன்று வருடாபிஷேகம்

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், சமாதானபுரம் கூத்தலிங்கேஸ்வரா் கோயிலில் 6- ஆம் ஆண்டு வருடாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.

அகஸ்தீஸ்வரம் அருகிலுள்ள சமாதானபுரத்தில் சிவகாமி அம்பாள் உடனுறை கூத்தலிங்கேஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது.

கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு நிா்மால்ய பூஜை, காலை 7.30 மணிக்கு பூா்வாங்க பூஜை, கலச பூஜை, அக்னிகாா்யம், மூல மந்திர ஹோமம், திரவிய ஹோமம், மஹா பூா்ணாஹூதி ஆகியவை நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சிவகாமி அம்பாள் சமேத கூத்தலிங்கேஸ்வரா் சுவாமி, பரிவார மூா்த்திகளுக்கும், புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்தங்களால் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT