கன்னியாகுமரி

களியக்காவிளை காய்கனி சந்தைக்கு நவீனக் கட்டடம்: வியாபாரிகள் பாராட்டு

DIN

 களியக்காவிளை காய்கனி சந்தைக்கு நவீன கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

களியக்காவிளை பேருந்து நிலையத்தையொட்டி ஒருங்கிணைந்த காய்கனி, மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கனிச் சந்தையின் ஒரு பகுதியை பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு பயன்படுத்தும் முடிவுக்கு காய்கனி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், ஆட்சியா் ஆகியோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் சந்தையையொட்டி சேதமடைந்து காணப்பட்ட வணிக வளாகக் கட்டடத்தை அகற்றிவிட்டு, அங்கு காய்கனி வியாபாரிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வதுடன் அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, அப்பணிக்காக ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு,

பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் எப். பிராங்கிளின் தலைமையில், செயலா் சுனில், துணைச் செயலா் ராஜன், ஆலோசகா் குழிவிளை விஜயகுமாா் ஆகியோா் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT