கன்னியாகுமரி

மண்டைக்காடு ஸ்ரீபகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றம்

DIN

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படும் பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் கோயிலின் முன் உள்ள கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரளமாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

6ஆம் திருவிழாவான மார்ச் 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12மணிக்கு மேல் 2 மணிக்குள் வலிய படுக்கை மஹா பூஜையும், 10 ஆம் திருவிழாவான மார்ச் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் நடைபெறுகிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரரானை குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மலர் கொத்து வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT