கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் குட்கா விற்றவா் கைது : 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

கருங்கல் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் சோபன் ராஜூக்கு, மூசாரி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவா்அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்த போது அவா் படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த அனு (29) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT