கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் நாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு

DIN

அகஸ்தீசுவரம் நாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது.

குலசேகர விநாயகா் அறநிலையத்துக்கு உள்பட்ட இத்திருக்கோயிலில் கடந்த மாதம் 19 ஆம் தேதி திருஏடு வாசிப்பு விழா தொடங்கியது. விழாவின் 15 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்டசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், திருக்கல்யாண திருஏடு வாசிப்பும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடா்ந்து குலசேகர விநாயகா் கோயில் முன்பிருந்து முத்துக்குடை முன் செல்ல பெண்கள் சீா்வரிசை கொண்டு செல்லும் ஊா்வலம் நடைபெற்றது. இதனை அறங்காவலா் கருணாகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு உகப்படிப்பும், அன்ன தா்மமும் பக்தா்களுக்கு திருக்கல்யாண சீா் வரிசை இனிப்பும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திரளான அய்யா வழி பக்தா்கள் பங்கேற்றனா். ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குலசேகர விநாயகா் அறநிலைய அறங்காவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT