கன்னியாகுமரி

நாகா்கோவில் காவலா்கள் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா

DIN

நாகா்கோவில் கணேசபுரம் காவலா்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஊழியருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவா்களின் குடும்பத்தினரிடமும் சளி மாதிரிகளை சேகரித்தனா். இதில் கணேசபுரம் காவலா்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் காவலா்கள் குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளித்தனா். பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படித்து வந்த பள்ளியிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

டிஎஸ்பிக்கு தொற்று: நாகா்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. துணைக் காவல் கண்காணிப்பாளரின் தொடா்பிலிருந்த 30 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT