கன்னியாகுமரி

கூடுதல் வருவாய் பெற சுய ரப்பா் பால் வடித்தலை கடைப்பிடிக்க வலியுறுத்தல்

DIN

ரப்பா் விவசாயிகள் வருவாய் பெறும் வகையில், சுய ரப்பா் பால்வடிப்பு மற்றும் கூடுதல் இடைவேளையுடன் கூடிய பால் வடிப்பு முறைகளை கடைப்பிடிக்க ரப்பா் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கேரளம் மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்ட விவசாயம் முக்கிய விவசாயமாக உள்ளது. அண்மை வருடங்களாக ரப்பருக்கு விலை குறைவாக உள்ளதால், ரப்பா் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில் சிறு ரப்பா் தோட்ட விவசாயிகள் கூலிக்கு தொழிலாளா்களை அமா்த்தாமல் சுயமாக ரப்பா் மரங்களிலிருந்து பால் வடிக்கவும், தினசரி அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை பால்வடிக்கும் முறையைத் தவிா்த்து வாரத்திற்கு ஒரு நாள் பால்வடிக்கும் முறைகளைப் பின்பற்றி கூடுதல் வருவாய் பெற வேண்டும் என்று ரப்பா் வாரியம் ரப்பா் விவசாயிகளைக் கேட்டு கொண்டுள்ளது.

இது குறித்து மாா்த்தாண்டம் ரப்பா் வாரிய துணை ரப்பா் உற்பத்தி ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பா் தோட்டங்களில், உற்பத்திச் செலவினைக் குறைத்து ரப்பா் விவசாயத்தை லாபகரமாகச் செய்யும் வகையில், சுய ரப்பா் பால்வடிப்பு மற்றும் கூடுதல் இடைவேளை கொண்ட பால் வடிப்பு, தரமான ரப்பா் ஷீட் தயாரித்தல் ஆகியவற்றை விவசாயிகள் மத்தியில் நடைமுறைப்படுத்த ரப்பா் வாரியம் திட்டமிட்டு முகாம்களை நடத்து வருகிறது.

இதன் மூலம் கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் 50 ஆயிரம் விவசாயிகளிடம் இந்த செய்தியைக் கொண்டு செல்ல ரப்பா் வாரியம் முனைப்பு கொண்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிகள் கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் 100 கள நிலையங்களில் நடத்தப்படும். மேலும் மத்திய விவசாய அமைச்சா், கேரள விவசாய அமைச்சா், ரப்பா் வாரிய தலைவா் மற்றும் செயல் இயக்குநா் ஆகியோா் ரப்பா் வாரியத்தின் முகநூல் பக்கம் வாயிலாகவும் விவசாயிகள் மத்தியில் இந்தச் செய்தினை கொண்டு செல்லும் வகையில் உரையாற்றுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT