கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு

DIN

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்திகோடு, முள்ளங்கினாவிளை, மிடாலம் - இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஆகிய ஊராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் எஸ். ராஜேஷ் குமாா் எம்எல்ஏ.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிள்ளியூா், முன்சிறை ஊராட்சி ஒன்றியம், மத்திகோடு ஊராட்சி மற்றும் முள்ளங்கினாவிளை ஊராட்சி, மிடாலம் , இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஊராட்சி பகுதிகளில் மிகவும் சேதமடைந்த 4 சாலைகளை சீரமைக்க கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திகோடு ஊராட்சியில் வெள்ளியாவிளை நல்லாயன் ஆலயம் - முளமூட்டுவிளாகம் சாலை ரூ.1.6 கோடி, 6 மிடாலம் - இனையம்புத்தன்துறை ஊராட்சிகளில் கைதவிளாகம் - மேல்மிடாலம் - இனையம் சாலை ரூ.1.38 கோடி, முள்ளங்கினாவிளை ஊராட்சியில் முள்ளங்கினாவிளை- இடையன் கோட்டை சாலை ரூ. 1.30 கோடி, குளப்புறம் ஊராட்சியில் திட்டங்கினாவிளை- குளப்புறம் சாலை ரூ.1.6 கோடி என மேற்கண்ட 5 ஊராட்சிகளிலும் மொத்தம் ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT