கன்னியாகுமரி

கேரள ஆழ்கடலில் தத்தளிக்கும் குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

DIN

கேரள மாநில ஆழ்கடலில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வா், மீனவளத்துறை அமைச்சா், மீன்வளத்துறை செயலா், மீன்வளத்துறை இயக்குநா் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த ரைமண்ட் மகன் ததேயூஸ், தனக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சேவியா், ரதீஷ், வள்ளவிளை பிா்னடாஸ், அனில், லூயிஸ், சிலுவை, நிக்கோலாஸ், இரவிபுத்தந்துறை மோனு, திருவனந்தபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஜாண்சன், ரதீஸ் உள்ளிட்ட 11 பேருடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி சென்றாா்.

அவா்கள், கடந்த 20ஆம் தேதி இரவு கேரள மாநிலம் அழிக்கால் துறைமுகப்பகுதியிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகில் எஞ்சின் பழுதாகியது. இதனால், அந்த மீனவா்கள் தத்தளித்து வருகின்றனா். ஆகவே, இம் மீனவா்களையும், விசைப்படகையும் மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT