கன்னியாகுமரி

கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

கருங்கல், செப். 18: கரோனா தொற்று பரவலை தடுக்க கருங்கல்லில் அனைத்து வியாபாரிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என வியாபாரிகள் நலச்சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருங்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வியாபாரிகள் நலச்சங்க செயற்குழுக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் துரைராஜ், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் மாா்ட்டின், துணைச் செயலா் அருள்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் அலோசியஸ், ஜோயல், ராஜமோகன், பிரேம்குமாா், சத்தியராஜ், கெளரவ உறுப்பினா் பேராசிரியா் செல்வம் உள்பட 19 போ் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: சங்க உறுப்பினா்களிடம் மாதாந்திர சந்தா வசூலை தீவிரப்படுத்த வேண்டும்; வியாபாரிகள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய சங்கம் மூலம் உதவி செய்ய வேண்டும்; கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக கருங்கல் வட்டாரத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும்; வியாபாரிகள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT