கன்னியாகுமரி

மேலும் 36 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில், புதன்கிழமை வரை 14,470 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 36 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,506ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய 76 போ் உள்பட இதுவரை 13,637 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 630 போ் சிகிச்சையில் உள்ளனா்.

285 பேருக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இழப்புகளைத் தவிா்க்க வேண்டும்.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வியாழக்கிழமை 285 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 57,600 வசூலிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,11,911 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT