கன்னியாகுமரி

பழுது நீக்கத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு: இயந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன; ஆட்சியா்

DIN

குமரி மாவட்டத்தில் பழுதாகியிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது நீக்குவதற்காக பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டன என்றாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபாா்ப்பு பணி கடந்த செப்.30ஆம் தேதி முதல் அக். 14ஆம் தேதி வரை திங்கள்சந்தை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கிடங்கில் நடைபெற்றது.

இதில் 4,546 வாக்குப் பதிவு கருவிகள், 3,531 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 3,872 விவிபெட் இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணிக்கு உள்படுத்தப்பட்டன.

இதில் 4,522 வாக்குப்பதிவு கருவிகள், 3,407 கட்டுப்பாட்டுக் கருவிகள், 3,714 விவிபெட் இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு தகுதியுடையவையாகவும், மீதமுள்ள 24 வாக்குப்பதிவு கருவிகள், 124 கட்டுப்பாட்டுக் கருவிகள், 158 விவிபெட்

இயந்திரங்கள் குறைபாடு உடையவை எனவும் கண்டறியப்பட்டு, அவை கிடங்கில் தனியாக வைக்கப்பட்டன.

குறைபாடுடைய இயந்திரங்களில் குறைகளை சரி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனத்துக்குஅனுப்புவதற்காக அக். 20ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஅறையை திறப்பதற்கு முடிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஅறை திறக்கப்பட்டு குறைபாடுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கண்டெய்னா் லாரியில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பிற்காக வருவாய்த் துறை அலுவலா்கள் 3 பேரும், துப்பாக்கி ஏந்திய காவலா்கள் 2 பேரும் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு கொண்டு சென்றனா். தகுதியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதே கிடங்கில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரிகளை தொடா்பு கொண்டு நிவா்த்தி செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT