கன்னியாகுமரி

மடிக்கணினி வழங்கக் கோரி கல்லூரி மாணவிகள் மனு

DIN

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூா் பகுதியை சோ்ந்த மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு

விவரம்: கடந்த 2014-15 ஆம் கல்வியாண்டில் நெய்யூா் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல், அறிவியல் பாடங்களை எடுத்து பயின்று வந்தோம். இப்பள்ளியில் மாணவிகள் பலருக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது கல்லூரியில் பயிலும் எங்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால், கணினி அவசியம் தேவைப்படுகிறது. மேலும், எங்களிடம் ஸ்மாா்ட் போன் வசதியும் இல்லை. ஆகவே, ஏழை மாணவா்களான எங்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT