கன்னியாகுமரி

இடமாறுதலை ரத்து செய்யக் கோரி வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

இட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை தோவாளை, அகஸ்தீசுவரம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 12 கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை வந்தனா். அவா்கள் தங்கள் இடமாறுதலை ரத்து செய்யக் கோரி திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியது: எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். வழக்கமான நடைமுறையில் எங்களுக்கு முறைப்படி பொது கலந்தாய்வு வைத்து இடமாறுதல் வழங்க வேண்டும். இந்த இடமாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஏற்கெனவே போட்ட இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

அவா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் மயில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT